உங்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் எப்போதாவது அணில் குஞ்சு ஒன்று வேகமாக ஓடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? வாசலில் பால் பாக்கெட்டை எடுக்கச் செல்லும்போது, மைனாவின் குரலை எப்போதாவது கேட்டது உண்டா? நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்.
சீக்கிரம் அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். நெடுநாள் அவை உம்மோடு வாசம் செய்யப்போவது இல்லை. கூகுளில் மட்டுமே அவற்றைத் தேடிப் பார்க்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரலாம்.
சென்னையில் நாள்தோறும் கொட்டப்படும் 3,000 டன் திடக் கழிவுகளால், 61 வகை நீர்த் தாவர இனங்கள், 110 வகை ஏரியின நீர்ப் பறவை கள், 46 வகை மீன்கள் அழிந்திருக்கின்றன என்கி றார்கள் சூழலியலாளர்கள். யோசித்துப்பாருங்கள்... எத்தனை எத்தனை மரங்களை, வனங்களை, நீர்நிலைகளை, பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஒவ்வொரு நாளும் அழிக்கிறோம் என்று.
இந்த அழிவு மற்ற உயிரினங் களை மட்டும் அல்ல; நம்மையும் தாக்குகிறது. ஆனால், இந்தத் தாக்குதல் மறைமுகமாக நடக்கிறது. தலைவிரித்தாடும் தற்போ தைய டெங்குவுக்கு மூல காரணம், இந்தியாவின் மோசமான குப்பை மேலாண்மை என செவிட்டில் அடித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். நாமோ, குப்பையை மறந்துவிட்டு கொசுக்களைத் துரத்திக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், எல்லா விஷயங்களையும் தாண்டி ஒரு பக்கம் மாற்றத்துக்கான விதைகளும் தூவப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. 'சேலம் மக்கள் குழு’வின் முயற்சி அந்த வகையில்ஆனது.
மே 2010-ல் சேலம் மூக்கனேரி பகுதியில், நெடுங்காலமாக வறண்டு இருந்த ஒரு தாழ்வான பகுதியைச் செம்மைப்படுத்தத் துவங்கி இன்று 4.5 லட்சம் க்யூபிக் லிட்டர் தண்ணீரைக்கொண்ட ஏரியை நிர்மாணித்து உள்ளார்கள் இந்தக் குழுவினர். கிட்டத்தட்ட 7 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர் உயர்ந்திருப்பது கூடுதல் இனிப்புச் செய்தி. 42 வகைப் பறவையினங்கள் இப்போது மூக்கனேரி ஏரியில் வாழ்கின்றன என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பியூஸ் மானுஸ்.
அதேபோல், வேலூர் என்றதும் சி.எம்.சி-யைத் தாண்டி, கொடும் வெயிலும் மொட்டைப் பாறையும்தான் பலருக்கும் நினைவு வரும். கூடுதலாக எப்போதும் உள்ள தண்ணீர் கஷ்டமும். கொஞ்சம் ஆர்வம் மிக்க கல்லூரி மாணவர்களை வைத்து, பேராசிரியர் சீனிவாசன், வேலூர் மலைகளில், சிறிது சிறிதாக 50-க்கும் மேற்பட்ட குளங்களை நிர்மாணித்து, அந்த மாவட்டக் கிராமங்களின் நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கி, பறவைஇனங்களின் வாழ்விடத்தை உருவாக்கி, மலையைப் பசுமையாக்கி இருக்கிறார்.
'திம்பக்கு’- சூழலிலும் விவசாயத்திலும் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ள ஆந்திர அமைப்பு. 'தினையும் வரகும் பயிராக்கி பெருமளவில் பயன்படுத்துகிறார் களாமே?’ என்று நான் தேடிப் போன ஊர் இது. திம்பக்கு பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்கவைத்தது. கிட்டத்தட்ட 100 கிராமங்கள், ஏறத்தாழ 30,000 மக்களை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியா வின் இரண்டாவது பெரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தபூர்!) அவர்கள் வாழ்வியலை உயர்த்தியதுடன், அருகில் உள்ள வறண்ட மூன்று மலைகளைப் பசுமைப் பூங்காவாக்கி இருக் கின்றனர் திம்பக்கு மக்கள். ஊரே தினையையும் ராகியையும் வரகையும்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறது. அங்கு ஓர் உணவு விடுதிக்குப் போனால் சாம்பார், ரசம், தயிர், கோவைக்காய் பொரியல் என்று முழுச் சாப்பாடும் தினை அரிசியில் போடுகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்கை விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்தை மிகக் குறைவான, சரியான விலை யில் விற்று தங்கள் வாழ்வை உயர்த்தி வருகின்றனர்.
இத்தனை விவரங்களையும் கேட்டுவிட்டு பஸ் ஏறப் போகும்போது, திம்பக்குவில் பணியாற்றிக்கொண்டு இருந்த நண்பர் ஆசிஷிடம் வியந்துபோய், 'இவ்வளவு விஷயம் செய்திருக்கிறீர்களே, நீங்க எங்க படிச்சீங்க?’ எனக் கேட்டேன். அவர் சொன்ன பதிலில் நான் ஆடிப்போய்விட்டேன். 'உங்க ஊர் சென்னை டி.ஏ.வி-யில் படித்து, பின் பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்து முடித்தேன்!’ என்றார். 'அப்போ அமெரிக்காவெல்லாம் போகலையா?’ என்றபோது, 'சீக்கிரம் நம்ம ஊருக்கு அமெரிக்காவில் இருந்து சாப்பிட வருவாங்க பாருங்க. இப்போதைக்கு நம் ஊரில் வாடி வதங்கும் விவசாயிக்கு எதாவது செய்வோம் எனக் கிளம்பிவிட்டேன்' என்றார், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த அந்தப் பொறியியல் பட்டதாரி. எனக்கு 'மாற்றத்தை விரும்புகிறாயா? மாற்றத்தை முதலில் உன்னில் இருந்து துவங்கு’ எனச் சொன்ன காந்தி நினைவுக்கு வந்தார். குறைகளைக் கண்களில் காணும் ஒவ்வொருவரும் மாற்றத்தை முன்னெடுக்க வேண்டிய கணம் இது தோழர்களே!
- பரிமாறுவேன்...


இந்திய அரசு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது. யாருக்கு? விவசாயிகளுக்கு. விவசாயிகள் மூலம் போகும் அந்தப் பணம் எங்கே போகிறது? நூற்றுச் சொச்சம் உர நிறுவனங்களுக்கு. செயற்கை விவசா யத்தின் பின்னுள்ள சங்கதி இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இன்னமும் ஏன் நம் உயிரைப் பணயம்வைத்து யாரோ சம்பாதிக்க வழிவகுக்கும் நவீன விவசாயத்தின் வாலைப் பிடித்து அலைய வேண்டும்? மாறக் கூடாதா?
நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும் செசாமின், லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.
அதிக வெப்பத்தில் கருகும் தன்மைகொண்ட எண்ணெயை நீண்ட நேரம் வறுக்கும் சமயத்தில் பயன்படுத்துங்கள். தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் இந்தப் பிரிவு.
தேன்... கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்பு. வெள்ளைச் சீனியைத் தொலைக்க விரும்புவோரின் முதல் தேர்வு. தேனும் இனிப்புதானே என்போருக்கு ஒரு செய்தி. இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக் கூறுகள்கொண்ட அமிழ்தம் அது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தனிச் சிறப்பு. சாதாரணமாக வெள்ளைச் சீனி, புண்ணை அதிகரிக் கும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக தீப்புண்ணுக்கு நல்ல தேன் முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. புற்று நோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லியோடோ, இஞ்சியோடோ இணைத்தும் சாப்பிடலாம். ஆனால், தண்ணீரில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் குறையும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல்பூர்வமானவை அல்ல. ஒரு விஷயம் முக்கியம். அதிக வெப்ப நிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைக்கும். மற்றபடி, தேன் அற்புதம்! 
உண்மையில், பாலைக் காட்டிலும் பல வகைகளில் உசத்தியானது மோர். மோர் ஒரு 'புரோபயோடிக்’ (Probiotic) பானம். நல்லது செய்யும் பல நுண்ணுயிர்களை மோர் உடலுக்குத் தரும். பால் பிடிக்காதவருக்கும் மோர் பிடிக்கும். புரதம், கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, பி12 எல்லாம் தந்து வயிற்றுப் புண்ணை வராது தடுக்கும்; அடிக்கடி வந்து தொல்லை தரும் வாய்ப்புண்ணுக்கும் முற்றுப்புள்ளிவைக்கும். வயிற்றுப்போக்கு நோய்க்கான சிகிச்சையில் மோர் ஒரு மருந்தும்கூட!
' 'தூரம்’ வந்த பெரியவளுக்கு உளுந்தங்களி செஞ்சு கொடுத் தியா?’, 'அவன் மூஞ்சப் பார்த்தா, சரியா வெளியே போற மாதிரி தெரியலையே, பாலாஸ்பத்திரியில கடுக்காய் லேகியம் வாங்கிக் கொடுத்தியா?’, 'ஏண்டி புதுப் பொண்ணு... 'அவகளுக்கு’ பால்ல முருங்கைப் பூ போட்டுக் காய்ச்சித் தரச் சொன்னேனே... செஞ்சியா?’ - இவை அனைத்துமே நலம் பயக் கும் விருந்துகள்தான்.
திடீரென ஒரே நாளிலேயே உங்களால் மாரத் தான் ஓட்டத்தின் முழுத் தொலைவையும் ஓடிக் கடக்க முடியுமா? இரண்டிரண்டு கிலோ மீட்டர் களாக ஓடிப் பழகித்தானே முழு தூரத்தையும் கடக்க முடியும். அப்படிக் கொஞ்சம் கொஞ்ச மாக இரண்டு, மூன்று குவளைகளாக ஒரு லிட்டர் வரை நீர் அருந்துங்கள். அதற்கு மேல் ஒரே நேரத்தில் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டாக உடைத்து, சோறாக்கி கெட்டித் தயிர் சேர்த்துச் சாப்பிட் டுப் பாருங்கள். அடடடடடா... சத்தியமாகச் சொல்கிறேன்... தயிர் சாதப் பிரியர்கள் வாழ் நாளுக்கும் சாமைத் தயிர் சாதம்தான் வேண்டும் என்று கேட்பீர்கள்.

இணைப்புக் குழு’ எனும் அமைப்பு வரகரிசியிலும் குதிரைவாலியிலும் செய்யும் முறுக்கு, அதிரசம், லட்டு, சுருள் பக்கோடா வகை யறாக்களைப் பார்த்தபோது அசந்தே போனேன். அந்த அமைப்பைச் சேர்ந்த ஷீலுவிடம் பேசியபோது, அவர் சொன்ன ஒரு விஷயம் நாம் எல்லோரும் கவனிக்க வேண்டியது. ''என்னதான் சிறுதானியங்கள் அற்புதமான குணங்களையும் ருசியையும் கொடுத்தாலும், பெரியவர்கள் மூலமாக அவற்றை ஒரு குடும்பத்துக்குள் கொண்டுசெல்வது கஷ்டம். காரணம், பெரியவர்கள் பழக்கத்தின் அடிமைகள். ஆனால், சின்னக் குழந்தைகள் அப்படி அல்ல. புதிய விஷயங்கள், புதிய ருசிக்கு அவர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். அதனால், குழந்தைகள் மூலமாக சிறுதானியங் களை வீட்டுக்குள் கொண்டுசெல்வதே சரியான முறை'' என்றார் ஷீலு. உண்மைதான். என் வீட்டில் அரிசி முறுக்கு, அதிரசம் வழக்கொழிந்து ரொம்ப காலம் ஆகிறது. உபயம்: என் வீட்டுப் பொடிசுகள்!
சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும். அனைத்துச் சத்துக்களுமே சற்று தூக்கலாக உள்ள இந்த தானியம், வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.
சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும். மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
பற்றிச் சொல்லும் தகவல்கள் பிரமிக்க வைக்கின் றன.
ஒரு முறை மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டுக்கு ஒரு கருத்தரங்குக்காகச் சென்று இருந்தேன். மதிய விருந்தில், தட்டில் பரிச்சயம் இல்லாத பல ஜந்துக்கள் கறி மசாலா வாடை இல்லாமல் கவிழ்ந்துகிடந்தன. கொஞ்சம் பயத்தில் தலை சுற்றிய நிலையில், 'எங்காவது கொஞ்சம் சோறு தென்படுகிறதா?' என்று தேடிப் பார்த்தபோது, ஹாலிவுட்டின் வில் ஸ்மித் மாதிரி இருந்த ஓர் ஆப்பிரிக்க நண்பர், ''இதைச் சாப்பிடுங்க...' என்று ஒரு குவளையில் கஞ்சி கொடுத்தார். இஃப்தார் நோன்புக் கஞ்சி மாதிரி இருந்த அந்தக் கஞ்சியைக் கொஞ்சம் தயக்கதுடன் நான் உறிஞ்சினால், அட, நம்ம ஊர் கேழ்வரகுக் கஞ்சி! 'இது எங்கள் ஊர் தானியம். எங்க பாட்டன் சொத்து. எங்களுடைய சிக்ஸ் பேக் உடம்புக்கும் சிறுத்தை மாதிரி ஓட்டத்துக்கும் இந்தக் கஞ்சிதான் காரணம்' என்று சொன்னார் அந்த நண்பர். கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்தானாம். அதிக விலை இல்லாத ஊட்ட தானியமான இது தான் இன்று வரை வறுமை யில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற ஆப்பிரிக்க நாட்டின் பிர தான உணவு. இன்றைய ஒலிம்பிக்கில் கால்பந்திலும் ஓடுகளப் போட்டிகளில் வில் எனப் பறக்கும் வேகத்துக்கும் கேழ்வரகின் கால்சியமும், அதில் உள்ள அமினோ அமிலங் களும்கூட காரணம் என்றால் அது மிகை யாகாது.
கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றனஆய்வு கள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.

கொண்ட ராட்சத இயந் திரங்களால் ஓங்கி ஓங்கி அறைந்து அடித்துத் தட்டையாக்கி, பின் 600 டிகிரி ஓவனில் 30 விநாடிகள் வேகவைத்து, உலர்த்தி எடுத்து, கடைசியாகத் தேவையான வைட்டமின்களையும் மினரல்களையும் தெளித்து, எப்போதும் உலர் வாக இருக்கவும் கெட்டுப்போகாமல் இருக் கவும் ரசாயனங்கள் சேர்த்து, அதிகபட்ச விலை யுடன் சந்தைக்கு அனுப்புகிறார்கள்.
ங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப் பவர்கள், சோளத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு எவ்வளவோ சத்துக்களைத் தருகிறது சோளம். குறிப்பாக, எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோராசிஸ் உள்ள பெண்களுக்குச் சோளம் கொடுக்கும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்துக்கு இணையே கிடையாது.